மட்டக்களப்பில் 7 வயது சிறுமி சிறுவர்களால் துஸ்பிரயோகம்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

மட்டக்களப்பில் 7 வயது சிறுமி சிறுவர்களால் துஸ்பிரயோகம்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

மட்டக்களப்பு வாகரையில் 7 வயது சிறுமி ஒருவரை நான்கு சிறுவர்கள் மற்றும் 18 வயது இளைஞர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 சிறுவர் உட்பட்ட 5 பேரில், 4 சிறுவர்களையும் பிணையில் விடுவித்ததுடன், 18 வயதுடைய இளைஞரை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் புதன்கிழமை (13) உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மட்டக்களப்பில் 7 வயது சிறுமி சிறுவர்களால் துஸ்பிரயோகம்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் | 7 Year Old Girl Molested By Boys In Batticaloa

வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் கணவனை இழந்த தாயார் ஒருவர் அவரது 7 வயது மகளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு தினமும் வேலைக்கு சென்றுவருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில் சிறுமியுடன் விளையாடிய 11 வயது சிறுவன் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து சிறுமியை 14,15 மற்றும் 18 வயதுடைய சிறுவனின் நண்பர்களும் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ள நிலையில், இதனை அவதானித்த அந்தபகுதி இளைஞன் ஒருவர் சிறுமியின் தாயாருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பொலிஸாரிடம் முறையிட்டதையடுத்து 11 வயதுடைய ஒருவரையும், 14 வயதுடைய இருவரையும் 15 வயதுடைய ஒருவரையும் 18 வயதுடைய ஒருவர் உட்பட 5 பேரை நேற்றைய தினம் (13) கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 15 வயதுக்குட்பட் 4 சிறுவர்களையும் சட்ட வைத்தியரிடம் சேதனைக்குட்படுத்துமாறும் அடுத்த வழக்கிற்கு ஆஜராகுமாறும் பிணையில் விடுவித்தார்.

அத்துடன் 18 வயதுடையவரை எதிர்வரும் 27 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.