இரு பிள்ளைகளையும் கழுத்தறுத்து கொன்ற தந்தை! கிழக்கில் அரங்கேறிய கொடூரம்..

இரு பிள்ளைகளையும் கழுத்தறுத்து கொன்ற தந்தை! கிழக்கில் அரங்கேறிய கொடூரம்..

இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்றுவிட்டு  தந்தை ஒருவர் தவறான முடிவெடுக்க முயற்சி செய்த சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை காவல் நிலைய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவமானது இன்று(14) காலை பெரிய நீலாவணை முஸ்லிம் பிரிவு பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் இடம்பெற்றுள்ளது.

மேலும், சம்பவ இடத்தில் இரு பிள்ளைகளின் சடலம் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டுள்ளது.

அத்துடன் தனது மனவளர்ச்சி குன்றிய இரு பிள்ளைகளை கொன்று தவறான முடிவெடுக்க ஈடுபட்ட தந்தையும் காயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரு பிள்ளைகளையும் கழுத்தறுத்து கொன்ற தந்தை! கிழக்கில் அரங்கேறிய கொடூரம் | Father Attempted Suicide Strangling Two Children

குறித்த சம்பவத்தில் முஹம்மது மிர்சா முகமது கலீல் (வயது-63) தற்போது காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ்(வயது-29) முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா(வயது-15) ஆகியோர் சம்பவ இடத்தில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தவர்களாவர்.

 மரணமடைந்த பிள்ளைகளின் தாய் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்திருந்ததாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை  பெரியநீலாவணை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று முன்னெடுத்துள்ளனர்.

GalleryGalleryGalleryGallery