மட்டக்களப்பில் பாரிய விபத்தில் சிக்கிய அரச பேருந்து..!

மட்டக்களப்பில் பாரிய விபத்தில் சிக்கிய அரச பேருந்து..!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் மாங்காடு பகுதியில் பாரிய விபத்தொன்று ஏற்ப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது இன்று(14) இடம்பெற்றுள்ளது.

கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று வீதியருகில் இரும்பு தளபாடங்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வட்ட ரக வாகனத்தில் மோதுண்டத்தில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவத்தில் பேருந்தில் பயணித்தவர்களில் ஐந்து பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லையென குறிப்பிட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் பாரிய விபத்தில் சிக்கிய அரச பேருந்து | Bus Accident In Batticaloa

மேலும் அருகிலிருந்த பேருந்து தரிப்பிடம் முற்றாக உடைந்து சேதமடைந்துள்ளதுடன் வட்டார் ரக வாகனம் மற்றும் பேருந்தின் முன்பகுதி என்பன பாரிய சேதம் அடைந்துள்ளன.

இதையடுத்து விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

GalleryGalleryGalleryGalleryGallery