தரமற்ற மருந்து இறக்குமதி விவகாரம்: அதிரடியாக கைது செய்யப்பட்ட வைத்தியர்..!

தரமற்ற மருந்து இறக்குமதி விவகாரம்: அதிரடியாக கைது செய்யப்பட்ட வைத்தியர்..!

சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்து இறக்குமி தொடர்பில் மருந்து விநியோகப்பிரிவின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் துஷித சுதர்சன கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வைத்தியர் நேற்றையதினம் (13) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை வந்தடைந்த அவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதேவேளை, தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.