விரைவில் முட்டைக்கு புதிய விலை நிர்ணயம்!!

விரைவில் முட்டைக்கு புதிய விலை நிர்ணயம்!!

முட்டைக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. 

எதிர்வரும் பண்டிகை காலத்தில் முட்டை விலை அதிகரிப்பை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

முட்டை உற்பத்தியாளர்களுக்கும் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று நேற்று(12.03.2024) பிற்பகல் விவசாய அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது சந்தையில் 50 ரூபாவை விடவும் குறைந்த விலையில் முட்டைகள் விற்பனை செய்யப்படுவதில்லையென சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை பொருளாதார மத்திய நிலையங்களில் குறித்த விலைக்கு குறைவாக முட்டைகள் விற்பனை செய்யப்படுகின்ற போதிலும் அந்த விலையில் சாதாரண மக்களுக்கு முட்டைகள் கிடைப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் முட்டைக்கு புதிய விலை நிர்ணயம் | Srilanka Egg Price Changes And Price Will Reducedஇந்நிலையில், எதிர்வரும் பண்டிகை காலத்தில் முட்டையின் விலையை குறைக்கும் வகையில் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக  தெரிவித்துள்ளார்.