​நேற்றிரவு நாட்டை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: முழு விபரம் வெளியானது

​நேற்றிரவு நாட்டை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: முழு விபரம் வெளியானது

அம்பலாங்கொடை மற்றும் எல்பிட்டி ஆகிய பகுதிகளில் நேற்றிரவு இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 06 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

பிடிகல, குருவல பிரதேசத்தில் கடையொன்றுக்கு அருகில் நேற்று (11) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதுடன், T-56 ரக துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

காயமடைந்தவர்களில் ஒருவர் எல்பிட்டிய வைத்தியசாலையிலும் மேலும் இருவர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

​நேற்றிரவு நாட்டை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: முழு விபரம் வெளியானது | Srilanka Gun Shooting 3 Death

இதேவேளை, அம்பலாங்கொடை கலகொட பிரதேசத்தில் கடையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையத்திற்கு பிரவேசித்த ஒருவரே பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

​நேற்றிரவு நாட்டை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: முழு விபரம் வெளியானது | Srilanka Gun Shooting 3 Death

மோட்டார் சைக்கிளில் நேற்றிரவு வந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, காயமடைந்தவர்கள் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.