கிழக்கில் பரபரப்பு; மாணவர் உயிரிழப்பு; மருத்துவமனையில் படையினர் குவிப்பு!

கிழக்கில் பரபரப்பு; மாணவர் உயிரிழப்பு; மருத்துவமனையில் படையினர் குவிப்பு!

அம்பாறை  திருக்கோவில் பகுதியில் மரதன் ஓடிய மாணவர் ஒருவர் உயிரிழந்த  சம்பவம்  பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இன்று திங்கட்கிழமை (11) இடம்பெற்ற இந்த சம்பவத்தில்  திருக்கோவில் மெதடித்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த விதுர்ஷன் என்ற 16 வயதுடைய மாணவனே  உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

இன்று காலை மரதன் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட  மாணவன் போட்டி நிறைவுற்றதும் வகுப்பறைக்கு சென்றுள்ளார்.

கிழக்கில் பரபரப்பு; மாணவர் உயிரிழப்பு; மருத்துவமனையில் படையினர் குவிப்பு! | East The Death Of A Student Who Ran A Marathon

இதன்போது வயிற்றுக்குள் கொழுவி பிடிப்பதாகக் கூறி மாணவர்   திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்று அங்கு  அவசர சிகிச்சை அளக்கப்பட்டதாக  தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அவருக்கான சி.பி.ஆர் சிகிச்சை உட்பட போதியளவான சிகிச்சைகள் மேற் கொள்ளப்பட்டதாகவும் எனினும், போதிய வைத்திய உபகரணங்களைக் கொண்ட அம்பியூலன் வண்டி இல்லாததன் காரணமாக அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு உடனடியாக மாற்ற முடியாமல் போனதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கில் பரபரப்பு; மாணவர் உயிரிழப்பு; மருத்துவமனையில் படையினர் குவிப்பு! | East The Death Of A Student Who Ran A Marathon

இந்நிலையில்  உயிரிழந்த மாணவனின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை   மாணவனின் உயிரிழப்புக்கு வைத்தியசாலையின் கவனயீனமே காரணம் என மாணவர்களும், இளைஞர்களும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிழக்கில் பரபரப்பு; மாணவர் உயிரிழப்பு; மருத்துவமனையில் படையினர் குவிப்பு! | East The Death Of A Student Who Ran A Marathon

இதன் காரணமாக தற்போது அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக  தகவ்லக்ள்  வெளியான நிலையில்   அப்பகுதியில் கலகம் அடக்கும் பொலிஸார் உட்பட படையினர் குவிக்கப்பட்டுள்ளமையானது   அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.