
முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் பயணித்த வாகனம் விபத்து..!
முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் பயணித்த வாகனம் முள்ளிவாய்க்கால் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது, நேற்று (07) மாலை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த கார் முள்ளிவாய்க்கால் பகுதியில் சென்று கொண்டிருந்த போது காரின் சில்லுக்கு காற்று குறைவடைந்ததன் காரணமாக திடீரென வீதியை விட்டு விலகி சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது அவருடன் அவரது துணைவியாரும் பயணித்துள்ளார்.
எவ்வாறாயினும், விபத்தினால் இருவருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.