காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான அறிவிப்பு
நாட்டின் பல பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி அனுராதபுரம்,மட்டக்களப்பு ,கொழும்பு,காலி ,யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் பிரதானமாக சீரான வானிலை காணப்படும்.
இதேவேளை தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மற்றும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.