இலங்கையில் நொடிப்பொழுதில் 100 மாணவர்களின் உயிரை காப்பாற்றிய பேருந்து சாரதி

இலங்கையில் நொடிப்பொழுதில் 100 மாணவர்களின் உயிரை காப்பாற்றிய பேருந்து சாரதி

பலாங்கொட, கல்தொட்ட வீதியில் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பாடசாலை பேருந்து மீது மரக்கிளை ஒன்று வீழ்ந்த போதிலும் தெய்வாதீனமாக மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

சாரதியின் சாமர்த்தியத்தினால் நொடிப்பொழுதில் மாணவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

பேருந்தின் மீது கிளை விழுந்த போது, மாணவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பேருந்திற்குள் இருந்தனர்.

மரத்தின் கிளை முறிந்து கிடப்பதை கண்ட பேருந்து சாரதி பேருந்தை உடனடியாக பாதுகாப்பாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இலங்கையில் நொடிப்பொழுதில் 100 மாணவர்களின் உயிரை காப்பாற்றிய பேருந்து சாரதி | Bus Driver Saved Lives Of Students In Balangoda

கிளை விழுந்ததில் பேருந்தின் முன் பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளை விழுந்ததால் பேருந்தில் இருந்த மாணவர்களை பின் கதவில் இருந்து இறங்குமாறு பேருந்து சாரதி குறிப்பிட்டுள்ளார்.