அஸ்வெசும தவறான தகவல்களை வழங்கியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
ஜூன் மாதம் முதல் அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கை 24 லட்சமாக அதிகரிக்கப்பதற்கு எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், அஸ்வெசும முதல் சுற்றில் ஏற்பட்ட பலவீனங்கள் களையப்பட்டு, பலமான பொறிமுறையாக மாற்றப்பட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள ஏழ்மையானவர்களை தேர்ந்தெடுப்பதற்குத் தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
இதேவேளை, அஸ்வெசும திட்டத்திற்காக தவறான தகவல்களை வழங்கிய 7,000 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டால், சட்டத்தின் பிரகாரம் உரிய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.