பிள்ளைகளுக்கு கல்வியை போதிக்கும் ஆசிரியரின் மோசமான செயல்!

பிள்ளைகளுக்கு கல்வியை போதிக்கும் ஆசிரியரின் மோசமான செயல்!

சிலாபம் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளினால் பாடசாலை ஆசிரியர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பாடசாலை ஒன்றின் ஆசிரியரே கைது செய்யப்பட்ட நிலையில், இவரிடமிருந்து 90 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிள்ளைகளுக்கு கல்வியை போதிக்கும் ஆசிரியரின் மோசமான செயல்! | Puttalam Teacher Arrest With Drugsகைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளுடன் ஆசிரியர் சிலாபம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.