மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு..
மட்டக்களப்பு தனியார் பேருந்து தரிப்பிடத்தின் அருகிலுள்ள வாவியில், உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் இன்று (29.02.2024) காலை 9 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய காத்தான்குடி 6 ஆம் பிரிவு ஏ.எல்.எஸ். மாவத்தையைச் சேர்ந்த 49 வயதுடைய முகமது கனிபா முகம்மது அஸ்மி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சுனயீனம் காரணமாக நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்று வீடு திரும்பிவராததையடுத்து உறவினர்கள் தேடிவந்த நிலையில் வாவியில் சடலம் மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு சடலத்தை மீட்டு பிரோத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்க கொண்டுசென்றுள்ளனர்.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.