தமிழர் பகுதியில் தாமரைப்பூ பறிக்கச் சென்றவர் உயிரிழப்பு

தமிழர் பகுதியில் தாமரைப்பூ பறிக்கச் சென்றவர் உயிரிழப்பு

திருகோணமலை, வெருகல் பூநகர் பனிச்சங்குளத்தில் தாமரைப்பூ பறிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் ஈச்சிலம்பற்று - பூமரத்தடிச்சேனை பகுதியில் வசித்து வரும் கனகசுந்தரம் விவேகானந்தன் (வயது 33) என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

தமிழர் பகுதியில் தாமரைப்பூ பறிக்கச் சென்றவர் உயிரிழப்பு | A Person Who Went To Pick Lotus Flowers Died

பூநகர் - பனிச்சங்குளத்திற்கு இன்று (28) காலை தாமரைப்பூ பறிப்பதற்காக பைபர் படகில் இருவரும் சென்ற போது பைபர் படகு கவிழ்ந்துள்ளது.

இதனையடுத்து தான் நீந்தி கரைக்கு வந்ததாகவும் உயிரிழந்தவரின் சக நண்பர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.