காணாமல் போனவர் சடலமாக மீட்பு

காணாமல் போனவர் சடலமாக மீட்பு

மஸ்கெலியா சாமிமலை பகுதியில் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் நேற்றிரவு (26) குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் சடலமொன்று காணப்படுவதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவுக்கு கிடைக்க பெற்ற தொலைபேசி தகவலையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் குடும்பஸ்தரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், அதே இடத்தை சேர்ந்த 40 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தந்தையான குமாரவேல் சுப்பிரமணியம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

காணாமல் போனவர் சடலமாக மீட்பு | Body Missing Person Was Recovered Jandu Days Ago

சடலமாக மீட்கப்பட்ட குறித்த குடும்பஸ்தர் கடந்த ஜந்து நாட்களுக்கு முன் காணாமல் போயுள்ளார் என அவரது மனைவி மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதேவேளை, சம்பவ இடத்திற்கு ஹட்டன் நீதிமன்ற நீதிவான் நேரில் வந்து பார்வை இட்ட பின்னர் குறித்த சடலம் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.