மிகவும் இரகசியமான வேலையை பார்த்த இலங்கை.!

மிகவும் இரகசியமான வேலையை பார்த்த இலங்கை.!

ரோந்து நடவடிக்கைகளிற்காக செங்கடல் பகுதிக்கு இரகசியமாக அனுப்பப்பட்ட இலங்கை கடற்படையின் கப்பல் தனது கூட்டு ரோந்து நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு இலங்கைக்கு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பப் எல் மன்டெப் நீரிணைக்கு இலங்கை கடற்படை கப்பல் அனுப்பப்பட்டதை கடற்படை பேச்சாளர் கயன் விக்கிரமசூர்ய உறுதி செய்துள்ளார்.

மிகவும் இரகசியமான வேலையை பார்த்த இலங்கை.! | Sri Lanka Secretly Sent To The Navp Ship Red Sea

மேலும், எந்த பிரச்சினைகளையும் எதிர்கொள்ளாமல் இலங்கை கடற்படை கப்பல் ரோந்து நடவடிக்கையை பூர்த்தி செய்துவிட்டு இலங்கை திரும்புகின்றது என தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின் பின்னர் இலங்கை கடற்படை முன்னெடுத்த ஆபத்தான இந்த நடவடிக்கையின் இரகசிய தன்மை காரணமாக கடற்படை மேலதிக தகவல்களை வெளியிடவில்லை என தெரியவருகின்றது.

மீண்டும் எப்போது இலங்கை கடற்படை தனது கப்பலை அனுப்பும் என்பது தொடர்பில் இலங்கை கடற்படை எதனையும் தெரிவிக்கவில்லை.