பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் 615 பேர் கைது

பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் 615 பேர் கைது

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 615 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 499 சந்தேகநபர்களும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 116 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் 615 பேர் கைது | 615 Suspects Arrested In Judicious Operations

இதேவேளை 125 கிராம் 992 மில்லி கிராம் ஹெராயின், 162 கிராம் பனி 361 மி.கி, கஞ்சா 01 கிலோ 157 கிராம், 55 போதை மாத்திரைகள், 6,817 கஞ்சா செடிகள் உட்பட பல சட்டவிரோத போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.