அம்பாந்தோட்டையில் ஒருவரின் உயிரை காவு கொண்ட பேருந்தின் மிதி பலகை

அம்பாந்தோட்டையில் ஒருவரின் உயிரை காவு கொண்ட பேருந்தின் மிதி பலகை

அம்பாந்தோட்டையில் கொழும்பு - வெல்லவாய பிரதான வீதியில் பேருந்து ஒன்றின் மிதி பலகையில் பயணித்துக்கொண்டிருந்த நபரொருவர் தவறி வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் அம்பந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபராவார்.

இவர் பேருந்தின் மிதி பலகையில் நின்று பயணித்துக்கொண்டிருந்த போது பேருந்து நடத்துனரிடம் பயணச்சீட்டை பெற்று மிகுதி பணத்தை தனது பணப்பையில் வைக்க முற்பட்ட போது தவறி வீழ்ந்து காயமடைந்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் ஒருவரின் உயிரை காவு கொண்ட பேருந்தின் மிதி பலகை | Bus Pedal Board A Living Organism

இதனையடுத்து இவர், பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோரின் உதவியுடன் அம்பந்தோட்டை தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.