கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு இளைஞர் பலி: கொழும்பில் சம்பவம்
கொழும்பு - கிராண்ட்பாஸ் காவல் பிரிவுக்குட்பட்ட இங்குருகொட சந்தியின் கால்வாய்க்கு அருகில் தலையில் கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு - கிராண்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.