சிறுமி வீட்டில் சிக்கிய இளைஞர்; விசாரணையில் பகீர் தகவல் ;பெரியப்பா கைது

சிறுமி வீட்டில் சிக்கிய இளைஞர்; விசாரணையில் பகீர் தகவல் ;பெரியப்பா கைது

மொனராகலை, மெதகம பொலிஸ் பிரிவில் ரத்தனதெனிய ஹொகொல்ல பிரதேசத்தில் 15 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், அவருடைய பெரியப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி, 2019 ஆம் ஆண்டில் இருந்து பெரியப்பாவினால், அச்சிறுமியின் வீட்டில் வைத்தே, இரண்டு வருடங்களாக அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்தமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

சிறுமி வீட்டில் சிக்கிய இளைஞர்; விசாரணையில் பகீர் தகவல் ;பெரியப்பா கைது | Youth Trapped In Girl S House Periyappa Arrestedசிறுமியின் வீட்டில் ஒருவர் திருட முற்பட்ட இளைஞரை அயலவர்கள், அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் , 15 வயதான சிறுமியுடன் காதல் உறவை ​கொண்டிருப்பதால் அந்த வீட்டுக்குச் சென்றதாகவும், சிறுமியை எவ்விதமான தொந்தரவுக்கும் உட்படுத்த வில்லையெனவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எனினும், சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய போது, சிறுமி, அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையின்போதே பெரியப்பாவின் தகாத செயல் தெரியவந்துள்ளது. தன்னுடைய பெரியப்பா, அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக  தெரிவித்த சிறுமி, வெளியில் சொன்னால், இரு வீட்டாருக்கும் இடையில் பிரச்சினை ஏற்படும் என்ற பயத்தால், வெளியில் சொல்லவில்லை என   கூறியமை  பொலிஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து டிறுமியின் பெரியப்பாவை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், சந்தேகநபரை பிபில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த மெதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.