சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு நீதிமன்றம் வழங்கிய கடுமையான தண்டனை!

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு நீதிமன்றம் வழங்கிய கடுமையான தண்டனை!

அக்கரப்பத்தனையில் உள்ள கிலாஸ்கோ தோட்டத்தில் இயங்கிய பிரஜா சக்தி நிலையத்தில் கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மேல் நீதிமன்ற நீதவான் விராஜ் வீரசூரியவால் இன்றையதினம் (20-02-2024) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு நீதிமன்றம் வழங்கிய கடுமையான தண்டனை! | Agrapatana Child Abused Suspects 10 Years Prison

மேலும் குறித்த தண்டனை நடராஜ் விஜயகுமார் என்ற 36 வயதுடைய நபருக்கே வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 06.07.2017 ஆம் ஆண்டு அக்கரப்பத்தனை - கிலாஸ்கோ தோட்டத்தில் இயங்கிய பிரஜா சக்தி நிலையத்தில் கடமையாற்றிய குறித்த நபர், அக்காலப்பகுதியில் பிரஜா சக்தி நிலையத்தில் கல்வி கற்க வந்திருந்த 18 வயதுக்கும் குறைவான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு நீதிமன்றம் வழங்கிய கடுமையான தண்டனை! | Agrapatana Child Abused Suspects 10 Years Prison

இவருக்கு எதிராக நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருந்து.

இவர் மீதான வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாகக் கடந்த ஆறு வருடங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட இவருக்கு 10 வருடக் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி (20.02.2024) இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு நீதிமன்றம் வழங்கிய கடுமையான தண்டனை! | Agrapatana Child Abused Suspects 10 Years Prison

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்க வேண்டும் இல்லாவிட்டால் மேலும் 3 வருட சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற தண்டனை பணமாக ரூபாய் 25 ஆயிரம் செலுத்த வேண்டும் எனவும் இல்லாவிட்டால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதவான் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.