எட்கா ஒப்பந்தம் குறித்து ஜனாதிபதி விளக்கம்
எட்கா எனப்படும் உத்தேச இந்திய – இலங்கை பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் தற்போதைய நிலை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விளக்கமளித்துள்ளார்.
இதன்படி, இந்த ஒப்பந்தம் தொடர்பான 14ஆவது சுற்று பேச்சுவார்த்தையை எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் 13ஆவது சுற்று பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி மாதம் புதுடெல்லியில் நடைபெற்றது.
அதில் பங்கேற்காத முரண்பாட்டு தீர்ப்பு மற்றும் இறுதி ஏற்பாடுகள் தொடர்பான துணைக்குழு, புதுடெல்லியில் அடுத்த சில நாட்களில் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.