முதலாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்க்கும் எண்ணிக்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

முதலாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்க்கும் எண்ணிக்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

பிறப்பு எண்ணிக்கை குறைந்ததால் பாடசாலைகளில் முதலாம் வகுப்பில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சமாக குறைந்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டில், 345,000 மாணவர்கள் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் சேர்க்கப்பட்டனர்.  எனினும்  2018 இல் அந்த எண்ணிக்கை 328,000 ஆகக் குறைந்துள்ளது.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டளவில் முதலாம் தரத்திற்கு சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சமாக குறைந்துள்ளதாக  அமைச்சர் குறிப்பிட்டார்.

முதலாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்க்கும் எண்ணிக்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | 1 Year School Application 2023 Sri Lanka

எனினும், 2012ஆம் ஆண்டு ஐந்தாம் தரத்தில் 327,849 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். 2018ஆம் ஆண்டில் அது 347,500 ஆக அதிகரித்தது. எனினும் 2022ஆம் ஆண்டில் 328,000 மாணவர்கள் ஐந்தாம் தரத்திற்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார் எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

2012ஆம் ஆண்டு பாடசாலை காலத்தில் பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களின்  எண்ணிக்கை 16.07 வீதமாக இருந்த போதிலும் தற்போது அது 7 வீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

முதலாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்க்கும் எண்ணிக்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | 1 Year School Application 2023 Sri Lanka

6, 7, 8, 9 ஆகிய வகுப்புகளில் கற்கும் மாணவர்களே இவ்வாறு பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளனர் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.