பொது மக்களிடம் இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கை!

பொது மக்களிடம் இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கை!

நாட்டில் கடந்த சில மாதங்களை விட மின் தேவை தற்போது அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இன்றையதினம் (19-02-2024) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பேச்சாளர் பிரதி பொது முகாமையாளர் நோயல் பிரியந்த இதனை தெரிவித்தார்.

பொது மக்களிடம் இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கை! | Sri Lanka Electricity Council S Request To Public

அங்கு மேலும் அவர் தெரிவித்ததாவது,

கடந்த பெப்ரவரி மாதத்தில் சில நாட்களாக 46 கிகாவோட் மணித்தியால மின்சார தேவை கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தியும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அது 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

பொது மக்களிடம் இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கை! | Sri Lanka Electricity Council S Request To Publicஇதேவேளை, மக்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தும் போது முடிந்தவரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் என பிரதி பொது முகாமையாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த மேலும் தெரிவித்தார்.