நாட்டின் மதுபான உற்பத்தி வீழ்ச்சி

நாட்டின் மதுபான உற்பத்தி வீழ்ச்சி

இலங்கையில் மதுபான உற்பத்தியில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அரச நிதி முகாமைத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களிலும் மதுபான உற்பத்தி 13.4 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் குறித்த காலப்பகுதியில் நாட்டின் மொத்த மதுபான உற்பத்தி 31.2 மில்லியன் லீற்றர் எனவும், கடந்த 2023 ஆம் ஆண்டில் இந்த தொகை 27 மில்லியன் லீற்றர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் மதுபான உற்பத்தி வீழ்ச்சி | Arrack Production Decrease

கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2023 ஆம் ஆண்டில் நாட்டின் மதுவரி வருமானம் சிறிதளவு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்ட எதிர்பார்க்கப்பட்ட வரி வருமானத்தில் 58 வீதம் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.