கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 6 பேருக்கு மீளவும் விளக்கமறியல்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 6 பேர் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பெற்றிருந்தது.
இந்தநிலையில், கடந்த 2ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.
இதனையடுத்து அவரை இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.