தகாத முறைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி கொலை: மன்னாரில் சம்பவம்..!

தகாத முறைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி கொலை: மன்னாரில் சம்பவம்..!

மன்னாரின் தலைமன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (15.2.2024) இரவு இடம்பெற்றுள்ளது.

தலைமன்னார் கிராமப் பகுதியில் தோட்டம் ஒன்றை பராமரிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட நபர் ஒருவராலேயே குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,  குறித்த சந்தேகநபர் மற்றும் அவரது மனைவி தலைமன்னார் பகுதியில் வசித்து வந்த நிலையில் கணவன் போதைக்கு அடிமையான நிலையில் மனைவி பிரிந்து சென்றுள்ளார். 

தகாத முறைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி கொலை: மன்னாரில் சம்பவம் | Girl Was Killed Due To Inappropriate Method

எனினும், அருகில் இருக்கும் தாய் ஒருவர் குறித்த சந்தேக நபருக்கு உணவு வழங்கி வந்த நிலையில் அவர்களுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.

இந்த நிலையில் சந்தேக நபர் நேற்று  முன்தினம் (14)  மாலை உணவு வழங்கும் தாயின் பேத்தியான குறித்த சிறுமியை கடைக்கு அழைத்து சென்ற நிலையில் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்ப்டுகின்றது.

தகாத முறைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி கொலை: மன்னாரில் சம்பவம் | Girl Was Killed Due To Inappropriate Method

இருப்பினும், அருகில் இருந்த சிசிடிவி கமராக்களின் உதவியுடனும் ஊர் மக்களின் உதவியுடனும் மேற்கோண்ட தேடுதலின் போது சிறுமியின் சடலம் நேற்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், தலைமன்னார் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.