பிரதேச செயலக பெண் ஊழியர் பாலியல் துஷ்பிரயோகம் ; கிராம உத்தியோகத்தர் கைது

பிரதேச செயலக பெண் ஊழியர் பாலியல் துஷ்பிரயோகம் ; கிராம உத்தியோகத்தர் கைது

புத்தளம் - கற்பிட்டி பிரதேச செயலகத்தில் பணிபுரியும் பெண் கிராம உத்தியோகத்தரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் கற்பிட்டி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் கிராம உத்தியோகத்தராவார். 35 வயதுடைய பெண் கிராம உத்தியோகத்தரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

பிரதேச செயலக பெண் ஊழியர் பாலியல் துஷ்பிரயோகம் ; கிராம உத்தியோகத்தர் கைது | Sexual Abuse Village Officer Female Puttaklamகடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி இந்த பெண் கிராம உத்தியோகத்தரின் வீட்டிற்கு சென்ற சந்தேக நபர் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சி செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு வழங்கிய நிலையில் சந்தேக நபர் கடந்த 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கைதான சந்தேக நபர் புத்தளம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்