இன்றைய வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான முன்னறிவித்தல்

இன்றைய வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான முன்னறிவித்தல்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை,மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (14.02.2024) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சிறிதளவில் மழை பெய்யுக்கூடும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இன்றைய வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான முன்னறிவித்தல் | Srilanka Today Weather Report மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைய வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான முன்னறிவித்தல் | Srilanka Today Weather Reportமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.