தமிழர் பகுதியில் பயங்கர விபத்து சம்பவம்: பெண் உட்பட 6 பேர் வைத்தியசாலையில்!

தமிழர் பகுதியில் பயங்கர விபத்து சம்பவம்: பெண் உட்பட 6 பேர் வைத்தியசாலையில்!

முல்லைத்தீவு - மாங்குளம், கொக்காவில் பகுதியில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தமிழர் பகுதியில் பயங்கர விபத்து சம்பவம்: பெண் உட்பட 6 பேர் வைத்தியசாலையில்! | Govt Bus Army Vehicle Collided 6 Injury Mullaitivu

இலங்கைக்கு சொந்தமான அரச பேருந்தும் இராணுவத்தினரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் இன்றையதினம் (12-02-2024) மாலை 4.30 மணியளவில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது. 

மாங்குளம், கொக்காவில் பகுதியில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தமிழர் பகுதியில் பயங்கர விபத்து சம்பவம்: பெண் உட்பட 6 பேர் வைத்தியசாலையில்! | Govt Bus Army Vehicle Collided 6 Injury Mullaitivuஇதன் போது துணுக்காயிலிருந்து காரைநகர் நோக்கி பயணித்த அரச பேருந்து எதிரே பயணித்த இராணுவ ரக் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

மேலும், விபத்துக்குள்ளான இராணுவ வாகனம் குடைசாய்ந்ததில் 4 இராணுவ அதிகாரிகள் காயமடைந்துள்ளதுடன், பேருந்தில் பயணித்த பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழர் பகுதியில் பயங்கர விபத்து சம்பவம்: பெண் உட்பட 6 பேர் வைத்தியசாலையில்! | Govt Bus Army Vehicle Collided 6 Injury Mullaitivu

அரச பேருந்தை செலுத்திய சாரதியும் காயங்களுடன் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் குறித்த சாரதி பொலிஸாரால் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.