இலங்கையில் நபரின் கொடூர செயல் : நாய் எரித்து கொலை

இலங்கையில் நபரின் கொடூர செயல் : நாய் எரித்து கொலை

கம்பஹா இம்புல்கொட பிரதேசத்தில் நாயை எரித்து கொலை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் நேற்று யக்கல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜகத் குமார என்ற 65 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உலயகொட பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் இன்று கம்பஹா மேலதிக நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இலங்கையில் நபரின் கொடூர செயல் : நாய் எரித்து கொலை | Man Killed Dog In Gampaha

சந்தேகநபர் செல்லப்பிராணிகளாக வளர்த்து வந்த உயர் இன நாய்களுடன் உயிரிழந்த நாய் இணைந்து செயற்பட்டதால் அவர் நாயை தீ வைத்து கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.