தமிழர் பகுதியில் பெரும் சோக சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த 14 வயது சிறுவன்!

தமிழர் பகுதியில் பெரும் சோக சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த 14 வயது சிறுவன்!

திருகோணமலை பகுதியில் ரயிலுடன் மோதி சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சமபவம் தம்பலகாமம் பகுதியில் இன்றைய தினம் (11-02-2024) இடம்பெற்றுள்ளது.

தமிழர் பகுதியில் பெரும் சோக சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த 14 வயது சிறுவன்! | 14 Year Old Boy Died Hit By A Train In Trincomaleeகுறித்த சம்பவத்தில் முள்ளிப்பொத்தானை யூனிட்-07 பகுதியில் வசித்து வந்த 14 வயதுடைய நளீம் முஹம்மது சப்ரிட் என்ற மாணவனே உயரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,

குறித்த சிறுவன், தம்பலகாமம் பகுதியிலுள்ள பாலத்துக்கு அருகில் சக நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளார்.

தமிழர் பகுதியில் பெரும் சோக சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த 14 வயது சிறுவன்! | 14 Year Old Boy Died Hit By A Train In Trincomalee

அப்போது, கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலுடன் மோதியதாகவும் தெரிய வருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.