நாடு திரும்பினார் ஜனாதிபதி

நாடு திரும்பினார் ஜனாதிபதி

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்ற 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.

ஜனாதிபதி நேற்று (10) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அத தெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-309 மூலம் ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 8 ஆம் திகதி இரவு அவுஸ்திரேலியாவிற்கு பயணமானார்.

தனது விஜயத்தின் போது, ​​7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் முக்கிய உரையை ஆற்றிய ஜனாதிபதி, பல நாடுகளின் அரச தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.