துப்பாக்கிச் சூட்டில் முடிந்த காணி தகராறு: ஒருவர் பலி

துப்பாக்கிச் சூட்டில் முடிந்த காணி தகராறு: ஒருவர் பலி

மஹகும்புக்கடல, செம்புகுளிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவமானது, இன்று (10) பிற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த நபர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, காணி தகராறு காரணமாக இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் முடிந்த காணி தகராறு: ஒருவர் பலி | Land Dispute Ended In Gunfire One Person Killed

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் துப்பாக்கி சூட்டை நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.