பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு சென்ற குடும்பத்தினருக்கு நேர்ந்த சோகம்

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு சென்ற குடும்பத்தினருக்கு நேர்ந்த சோகம்

அம்பாறை- சியம்பலாண்டுவ பிரதான வீதியின் தமண பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதியில் இன்று (10.02.2024) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், குறித்த  விபத்தில் காயமடைந்த ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமண பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் மகளின் பட்டமளிப்பு விழாவிற்கு திக்வல்லையிலிருந்து வருகை தந்த குடும்ப உறுப்பினர்களின் வாகனமே பாதையின் அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு சென்ற குடும்பத்தினருக்கு நேர்ந்த சோகம் | Vehicle Accident At The Graduation Ceremony

இந்நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தமண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.