4 இலட்சம் புதிய அஸ்வெசும பயனாளிகளைத் தெரிவு!

4 இலட்சம் புதிய அஸ்வெசும பயனாளிகளைத் தெரிவு!

4 இலட்சம் புதிய அஸ்வெசும பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி இன்று (10) ஆரம்பமாகவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது .

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ் கொடுப்பனவுகளைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்களுக்கு ஏப்ரல் முதலாம் திகதி முதல் கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

4 இலட்சம் புதிய அஸ்வெசும பயனாளிகளைத் தெரிவு! | Recruit 4 Lakh New Aswesuma Users

அஸ்வெசும பயனாளிகளை தெரிவு செய்யும் போது பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் சில நிபந்தனைகளை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதேவேளை குடும்பங்களைத் தேர்ந்தெடுப்பதில் பயன்படுத்தப்படும் நிபந்தனைகளின்படி யாராவது இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியவில்லை என்றால் அவர்களும் இதன் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

அதேவேளை, ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் அஸ்வெசும கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் 4 இலட்சம் புதிய அஸ்வெசும பயனாளிகளைத் தெரிவு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.