கடந்த 24 மணித்தியாளங்களில் 663 சந்தேக நபர்கள் கைது

கடந்த 24 மணித்தியாளங்களில் 663 சந்தேக நபர்கள் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸாரின் யுக்திய நடவடிக்கைகளில் 663 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 547 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 116 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 663 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாளங்களில் 663 சந்தேக நபர்கள் கைது | 663 Suspects Arrested In Last 24 Hours

 

அவர்களிடமிருந்து 175 கிராம் 191 மில்லி கிராம் ஹெராயின், பனி 171 கிராம் 197 மி.கி, கஞ்சா 515 கிராம் 538 மி.கி, 807 கஞ்சா செடிகள், மாவா 77 கிராம் 200 மி.கி, 296 மாத்திரைகள், மதன மோதக 85 கிராம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

அதேவேளை, போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 547 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.