சட்டவிரோத மின்சாரத்தால் பறிபோன உயிர்

சட்டவிரோத மின்சாரத்தால் பறிபோன உயிர்

  புப்புரஸ்ஸ - லெவலன்வத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சட்டவிரோத மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் புப்புரஸ்ஸ - லெவலன்வத்தை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய நபராவார்.

சட்டவிரோத மின்சாரத்தால் பறிபோன உயிர் | Lives Lost Due To Illegal Electricity

குறித்த வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அருகில் உள்ள வீட்டில் இருந்து மின்சாரம் பெற்றுக்கொள்ள முயன்ற போதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புப்புரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.