கொழும்புவாசிகளுக்கு ஒரு விலையுயர்ந்த விடயமாக மாறிய மரணம்!

கொழும்புவாசிகளுக்கு ஒரு விலையுயர்ந்த விடயமாக மாறிய மரணம்!

கொழும்பு மாநகர சபை (CMC) ஒரு கல்லறைக்கான (இரண்டு சதுர அடி) கட்டணத்தை 180,000 ரூபாயாக உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொ ழும்பு நகர எல்லைக்குள் சுடுகாட்டுக்கான கட்டணம் கொழும்பு நகரவாசிகளுக்கு 1000 ரூபாவிலிருந்து 10,000 ரூபாயாகவும் வெளியாட்களுக்கு 20,000 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதன் காரணமாக , கொழும்பு நகரவாசிகளுக்கு மரணம் ஒரு விலையுயர்ந்த விடயமாக மாறியுள்ளது.

"இரண்டடிக்கு இரண்டடி அளவில் உள்ள ஒரு சிறிய நிலத்தை மட்டுமே ஒருவர் பெற முடியும், இறந்தவரின் சாம்பலைக் கொண்டு ஒரு கலசத்தை புதைக்க மட்டுமே முடியும்." என பெயர் குறிப்பிட விரும்பாத CMC இன் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கொழும்புவாசிகளுக்கு ஒரு விலையுயர்ந்த விடயமாக மாறிய மரணம்! | Increase In Fees For Cremation Within Colombo Cityஅதேவேளை , 2018 இல் கல்லறைக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவிருந்ததாகவும், ஆனால் சபை உறுப்பினர்கள் அந்த ஆண்டு சபையில் இந்த தீர்மானத்தை தோற்கடித்ததாகவும் அவர் கூறினார்

இநிலையில் காணியின் பெறுமதி அதிகரிப்புக்கு ஏற்ப கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, கொழும்பு நகர எல்லைக்குள் சுடுகாட்டுக்கான கட்டணம் கொழும்பு நகரவாசிகளுக்கு 1000 ரூபாவிலிருந்து 10,000 ரூபாயாகவும் வெளியாட்களுக்கு 20,000 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக CMC இன் முன்னாள் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

கொழும்புவாசிகளுக்கு ஒரு விலையுயர்ந்த விடயமாக மாறிய மரணம்! | Increase In Fees For Cremation Within Colombo City

இது தொடர்ப்பில் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளேன். இந்த விடயம் மேல்மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலகவிடம் தெரிவிக்கப்பட்டதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது என அவர் கூறினார்.

சிஎம்சியின் முன்னாள் உறுப்பினர் ஷெர்மிலா கோனவலா மேலும் கூறுகையில், தகனம் மற்றும் கல்லறைக் கட்டணங்கள் பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன. "CMC வசூலிக்கும் புதிய தொகைகளை மக்களால் ஈட்ட முடியாது," என்றும் அவர் கூறினார்.