நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கவிலை!

நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கவிலை!

பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் உள்ள நிலையில் இன்றையதினம் தங்கவிலையானது குறைவடைந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில் சென்னையில் நேற்று பிப்ரவரி 5ஆம் திகதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது.

நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கவிலை! | Gold Prices That Made Jewelry Lovers Happy

சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி 6) கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.5,830-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.46,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 குறைந்து ஒரு கிராம் ரூ.4,776க்கும், சவரனுக்கு ரூ.128 குறைந்து ஒரு சவரன் ரூ.38,208க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கவிலை! | Gold Prices That Made Jewelry Lovers Happy

வெள்ளி விலை

வெள்ளி விலை அதிரடியாக கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.76.00க்கும் ஒரு கிலோ ரூ.76,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.