கள்ளக்காதலால் ஏற்பட்ட விபரீதம் ; பெண் ஒருவர் படுகொலை
கொழும்பு சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்பஹா பிரதேசத்தில் கள்ளக்காதலில் ஏற்பட்ட தகராறு காரணமாக பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (05) மாலை இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்கு பெத்தேவெவ, சூரியவெவ பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதுடைய பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் இருந்த கள்ளக்காதலால் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலையைச் செய்த சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.