வீபரித முடிவை எடுத்த கணவன்... வீடு திரும்பிய மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வீபரித முடிவை எடுத்த கணவன்... வீடு திரும்பிய மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

புத்தளத்தில் உள்ள பகுதியொன்றில் நஞ்சருந்தி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றையதினம் (04-02-2024) மதுரங்குளி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வீபரித முடிவை எடுத்த கணவன்... வீடு திரும்பிய மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Family Member Died After Take Poison In Puttalamகுறித்த சம்பவத்தில் அதே பகுதியை பகுதியைச் சேர்ந்த 48 வயதான உதந சனத் பதிராஜா எனும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மதுபானம் அருந்தும் பழக்கமுடைய உயிரிழந்த நபர் இதற்கு முன்னரும் பலமுறை இவ்வாறு தஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும், சில சந்தர்ப்பங்களில் தான் நஞ்சருந்தியிருப்பதாக மனைவியிடம் கூறியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வீபரித முடிவை எடுத்த கணவன்... வீடு திரும்பிய மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Family Member Died After Take Poison In Puttalamஇந்த நிலையில் , நேற்று மாலை வீட்டைவிட்டு வெளியே சென்ற குறித்த நபர் மீண்டும் வீட்டுக்கு வந்து தான் நஞ்சருந்திவிட்டதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

கணவன் கூறியதை கணக்கில் எடுக்காத மனைவி, தமது வீட்டுக்கு முன்னால் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வருகை தந்த போது வீட்டு வாசலில் கணவன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார் என மனைவி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

வீபரித முடிவை எடுத்த கணவன்... வீடு திரும்பிய மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Family Member Died After Take Poison In Puttalamபுத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம் , சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டு மரண விசாரணையை நடத்தினார்.

மேலும், சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனையின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் குறித்து மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.