குழந்தைப் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; அதிர்ச்சியளிக்கும் காரணம்!
இலங்கையில் குழந்தைப் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இதற்கு முன்னர் 450 ஆக இருந்த நிலையில் ஒரு வருடத்தில் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
அந்தவகையில் கையடக்கத் தொலைபேசிக்கு அடிமையாகுவதால் ஏற்படும் உடல் சோர்வு, புற்றுநோய் உள்ளிட்ட தொற்று நோய்கள் அதிகரிப்பதற்கு ஒரு காரணம் எனவும் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார்.