கண்டியில் பயங்கர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த கணவன் - மனைவி!

கண்டியில் பயங்கர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த கணவன் - மனைவி!

கண்டி உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் கணவன் - மனைவி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்றைய தினம் (03-02-2024) பிற்பகல் தலத்துஓயா பொலிஸ் - ஹரகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கண்டியில் பயங்கர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த கணவன் - மனைவி! | Couple Death In Car Accident In Kandy

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தண்ணேகும்புரவில் இருந்து ராகலை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று ராகலையிலிருந்து தண்ணேகும்பு நோக்கிச் சென்ற வானுடன் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

கண்டியில் பயங்கர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த கணவன் - மனைவி! | Couple Death In Car Accident In Kandyவிபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன் - மனைவி இருவரும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் மெதிரிகிரிய பிரதேசத்தில் வசிக்கும் 68 மற்றும் 62 வயதுடைய கணவன் மனைவியரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கண்டியில் பயங்கர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த கணவன் - மனைவி! | Couple Death In Car Accident In Kandy

மேலும், இந்த விபத்து தொடர்பில் வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.