துரியன் பழத்தால் பறிபோன உயிர்!

துரியன் பழத்தால் பறிபோன உயிர்!

மேற்கு பத்பேரிய - வடப்பிட்டிய பிரதேசத்தில் தனியார் காணி ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எஹெலியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர் வடப்பிட்டிய - பரகடுவ பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

துரியன் பழத்தால் பறிபோன உயிர்! | Life Lost By Durian Fruit

உயிரிழந்தவர் துரியன் மரம் ஒன்றிற்கு அருகில் காலில் தீக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த காணியின் உரிமையாளர் துரியன் பாதுகாப்பிற்காக மின்சார வேலி அமைந்துள்ள நிலையில் குறித்த மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் காணி உரிமையாளரான 51 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளை எஹெலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.