பெரும் துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்; மாடியில் இருந்து விழுந்து மாணவன் உயிரிழப்பு

பெரும் துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்; மாடியில் இருந்து விழுந்து மாணவன் உயிரிழப்பு

வீடொன்றின் பாதுகாப்பற்ற மாடியில் இருந்து தவறி விழுந்த 15 வயது மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து குருநாகல், ஹிந்தகொல்ல கல்பொத்தவத்த பிரதேசத்தில் நேற்று (01) மாலை இடம்பெற்றுள்ளது.

பெரும் துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்; மாடியில் இருந்து விழுந்து மாணவன் உயிரிழப்பு | Student Dies After Falling From Floor Kurunegala15 வயதுடைய சுதேஷ் மதுஷங்க தனது வீட்டிற்கு அருகில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த துயரம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

அயல் வீடொன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவன் , குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

Srilanka Police

சுதேஷ் மதுஷங்க ஹிந்தகொல்ல திகம்பிட்டிய ஸ்ரீ பியரதன மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் நிலையில் இவ்வருடம் தரம் 10 க்கு சித்தியடைந்திருந்தார்.

மாணவைன் உயிரிழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்திய நிலையில் ,சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.