இன்றைய தினத்துக்கான வானிலை எதிர்வுகூறல்

இன்றைய தினத்துக்கான வானிலை எதிர்வுகூறல்

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய தினத்துக்கான (02.02.2024) வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல் 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இன்றைய தினத்துக்கான வானிலை எதிர்வுகூறல் | Today Weather Condition In Sri Lankaமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.