வீட்டில் நடந்த விபரீதம் : சிறுவனுக்கு எமனாக வந்த கொங்கிரீட் தூண்

வீட்டில் நடந்த விபரீதம் : சிறுவனுக்கு எமனாக வந்த கொங்கிரீட் தூண்

தொம்பகஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹரவ சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றில் கொங்கிரீட் தூண் ஒன்று தலையில் விழுந்ததில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அம்பலாந்தோட்டை ரிதிகம பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டில் நடந்த விபரீதம் : சிறுவனுக்கு எமனாக வந்த கொங்கிரீட் தூண் | Tragedy At Home Concrete Pillar Falls On Boy

அந்த வீட்டில் போடப்பட்டிருந்த இரண்டு கான்கிரீட் தூண்களுக்கு இடையே ஊஞ்சல் வடிவில் கட்டப்பட்டிருந்த தொங்கு வலையில் சிறுவன் அமர்ந்து மேலும் சில குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த போது அதில் இருந்த கொன்கிரீட் தூண் ஒன்று திடீரென சிறுவனின் தலையில் விழுந்தது.

விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.