18 சதம் நிலுவைத் தொகைக்காக மின்சாரம் துண்டிப்பு

18 சதம் நிலுவைத் தொகைக்காக மின்சாரம் துண்டிப்பு

காலி - கல்வடுகொடையில் உள்ள வீடொன்றில் மின்கட்டணத்தில் செலுத்த வேண்டிய 18 சதம் நிலுவைத் தொகையை செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 

மின்கட்டணம் செலுத்தும் போது 18 சதம் பற்றாக்குறை உள்ளதாகவும், 18 சென்ட் மின்சாரம் துண்டிக்க மாட்டோம் என நிறுவனம் கூறியதாகவும் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

பின்னர் வீட்டிற்கு வந்து மின்சாரத்தை துண்டித்ததாகவும் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

18 சதம் நிலுவைத் தொகைக்காக மின்சாரம் துண்டிப்பு | Electricity Connection Disconnected For 18 Cents

வீட்டின் உரிமையாளர் மேலும் தெரிவிக்கையில், தனது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் குளிர்சாதனப்பெட்டியில் இருந்த மருந்துகள் உட்பட பல பொருட்கள் நாசமாகியுள்ளதாக நிறுவனத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து, இது தொடர்பில் இழப்பீடு வழங்குவதாக தெரிவித்தனர்.

பின்னர் மாலை மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.