செல்பி மோகம் :தொடருந்தில் பயணித்த ரஷ்ய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை

செல்பி மோகம் :தொடருந்தில் பயணித்த ரஷ்ய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை

தெமோதராவில் இருந்து எல்ல நோக்கி தொடருந்தில் பயணித்த ரஷ்ய பெண் ஒருவர் செல்பி எடுக்க முற்பட்ட வேளை தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

நேற்று (26) வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தெமோதர பிரதேசத்தில் இருந்து எல்ல நோக்கி அமைந்துள்ள பிங்கயாவிற்கு அருகாமையில் நேற்று காலை குறித்த பெண் இந்த புகைப்படங்களை எடுக்க முயற்சித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

செல்பி மோகம் :தொடருந்தில் பயணித்த ரஷ்ய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை | Russian Girl Take A Selfie On The Train Fell Down25 வயதான இந்த யுவதி தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.